Pages - Menu

Pages

ஐந்து தலைமுறை பின்னணி பாடகர்'

 மதுரையில், சவுராஷ்டிர குடும்பத்தில், 1923 மார்ச் 24ம் தேதி பிறந்தவர், டி.எம்.சவுந்தரராஜன். காரைக்குடி ராஜாமணி அய்யங்காரிடம் இசை பயிற்சி பெற்று, கச்சேரிகள் செய்தார். 1950ல் வெளியான கிருஷ்ண விஜயம் என்ற படத்தில், 'ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி...' பாடல் வழியாக சினிமா துறையில் நுழைந்தார்.'ஐந்து தலைமுறை பின்னணி பாடகர்' என்ற பெருமை பெற்றார். 60 ஆண்டு கால இசை பயணத்தில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்கள் பாடியுள்ளார். 3 ஆயிரத்துக்கும்

மேற்பட்ட பக்தி, மெல்லிசை பாடல்களை இசையமைத்து பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட, 11 மொழி திரைப்படங்களில் பாடியுள்ளார். பட்டினத்தார், அருணகிரிநாதர், அகத்தியர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 'பத்மஸ்ரீ' உட்பட ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். 2013 மே 25ம் தேதி, 91வது வயதில் காற்றில் கலந்தார்.பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமான தினம் இன்று!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக