ரஷ்யா, ஈரான், அர்மேனியாவுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான ட்விட்டர் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் வலைப்பூ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''ட்விட்டர் கொள்கைகளை மீறிய காரணத்துக்காக ஈரானில் இருந்து செயல்பட்டு வந்த 238 கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. நேட்டோ படைகள் குறித்த தகவல்களைப் பரப்பிய காரணத்துக்காகவும் அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் குறிவைத்துப் பதிவிட்ட காரணத்தாலும் ரஷ்ய நாட்டில் இருந்த 100 கணக்குகளை நீக்கியுள்ளோம்.
அதேபோல அஸர்பைஜான் நாட்டைக் குறிவைத்துப் பதிவுகளைப் பரப்பிய அர்மேனிய நாட்டைச் சேர்ந்த 35 கணக்குகளும் நீக்கப்பட்டுள்ளன.
ட்விட்டர் நிறுவனத்தின் கொள்கைகளை மீறிச் செயல்பட்டதை அடுத்து சுமார் 373 கணக்குகள் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், போராட்டத்துக்கு ஆதரவாகவும் கருத்துகளைத் தெரிவித்து வந்த போலியான முகவரி கொண்ட 250 ட்விட்டர் கணக்குகள், மத்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டதன் பேரில் ட்விட்டர் சார்பில் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments