Pages - Menu

Pages

இந்தியாவிலேயே 10 கோடி டோஸ்கள் ஸ்புட்னிக்-வி மருந்து தயாரிக்க ஒப்பந்தம்!

 இந்தியாவில் ஆண்டுக்கு 10 கோடி டோஸ்கள் ஸ்புட்னிக்-வி மருந்தை உற்பத்தி செய்வதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதை அடுத்து, நோய் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நோய் பரவல் வேகத்தை குறைக்கும் வகையில் கோவாக்ஸின், கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளை பொதுமக்கள் செலுத்திக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

எனினும் தடுப்பு மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவி வருவதால், ரஷ்யாவில் இருந்து ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சோதனை ரீதியாக அந்த தடுப்பூசி ஒரு சிலருக்கு செலுத்தப்பட்டது.

 இந்நிலையில், இந்தியாவிலேயே ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கான உடன்பாடு ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியம் மற்றும் இந்தியாவின் பானாசியா பயோடெக் இடையே எட்டப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் பானசியா பயோடெக் நிறுவனம் ஆண்டுக்கு 10 கோடி ஸ்புட்னிக்-வி டோஸ்களை தயாரிக்கவுள்ளது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக