புதுச்சேரியில் மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு சாக்லேட் சிலை வைக்கப்பட்டிருப்பது.கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் கடந்த செப்.25ம் தேதி இயற்கை எய்தினார். கிட்டத்தட்ட 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி, மக்கள் மனதில் கால் பதித்த எஸ்.பி.பியின் இழப்பு, இசைத்துறையில் பேரிழப்பாக கருதப்படுகிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் இருக்கும் ‘சூகா’ என்ற சாக்லெட் கடையில் எஸ்.பி.பியின் சாக்லேட் சிலை வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள சூகா என்ற சாக்லெட் பேக்கரியில் முழுக்க முழுக்க சாக்லெட்டால் செய்யும் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிந்து வருபவர் chef ராஜேந்திரன்.
இவர் ஒவ்வொரு ஆண்டும் சாக்லெட்டால் செய்யப்படும் பொருட்களில் தன்னுடைய புதிய கலைத்திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த காலங்களில் சாக்லெட்டை கொண்டு ரஜினிகாந்த் உருவம், ரயில், சச்சின் டெண்டுல்கர், அப்துல்கலாம், இந்திய விமானப்படை பைலட் அபிநந்தனின் ஆகியோரின் உருவங்களை சாக்லேட்டுகளை கொண்டு தயாரத்துள்ளார். இந்நிலையில் வருகின்ற கிறிஸ்துமஸ் மற்றும் 2020 புத்தாண்டையொட்டி மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவரது நினைவை போற்றும் வகையிலும் 339 கிலோ சாக்லெட்டை கொண்டு 5.8 அடி உயரத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் சாக்லெட் சிலையை வடிவமைத்துள்ளனர். 161 மணி நேரத்தில் தத்ரூபமாக தயாரிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பி சாக்லெட் உருவம் கொண்ட சிலை சாக்லெட் பிரியர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.இந்த சிலை வரும் ஜன.10ம் தேதி வரையில் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments